Monday, February 21, 2011

இது ஓரு சமூதாயத்தின் குரல்........"அழிக்கப்பட்டு வரும் மரபுரிமை'



தற்போதய நுற்றாண்டில் கிரகத்தினை விட்டு கிரகம் தாண்டும் அளவிற்கு மனித அறிவியல் தெடர்பாடல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. மனித சிந்தனைக்கு போட்டி போடும் அளவிற்கு தொழில் நுட்பம் வளர்சி இன்று
உச்சத்தினை எட்டியுள்ளது. மனிதன் சாத்தியமற்ற விடயங்களுக்கு சவாலாக
விளங்குகிறான்.இயற்கைக்கு முரனானதை சிந்திக்கின்றான் .எனினும் இன்றைய தொழில்நுட்பமும் வியக்கும் அளவிற்கு ஆரம்ப மனிதனின் படைப்புக்கள் கானப்பட்டது.



உலக பொதுபார்வையில் அன்றைய மனித கண்டுபிடிப்புகளே இன்றைய
தெழில்நுட்பத்துக்கு வித்திட்டது  என்றே கூறலாம். இவற்ரை தொடர்ந்து வந்த
விஞ்ஞானமோஇதெழிழ்நுட்பமோஇ ஆதிமனிதரின் கலைப்படைப்புக்களை இன்னுமும் ஆய்வுக்கு உற்படுத்திய வண்ணமே இருக்கிறார்கள் .இன்றுவரை இவ் அனைத்து விடங்கங்களும் சவாலகவே காணப்படுகின்றது. பல கட்டுடத்துறை வல்லுனர்கள் ஆராய்சியாளர்களின் ஆராய்விற்கு பின்னும் வியப்பான விடயங்களில் பிரமீட்களும் ஒன்றாகும் இற்ரைக்கு கி.மு 4500 ஆண்டளவில் எகிப்த்தில் ஆரம்பித்ததாக நம்பப்படுகின்றது இன்றுவரையில் இயற்கைக்கு ஈடுகொடுத்து நிற்கின்றன அதாவது எகிப்தியர்கள் இறந்தபின் அவர்களை மீண்டும் இவ்வுளகிற்கு கொண்டு வர (ka) எனற மாற்றுயிர் செயல்படும் என நம்பினார்கள் இதன் காரணமாக இறந்த உடல்கலை மருந்திட்டு பாதுகாக்கப்பட்டத அவ்வாறு பாதுகாக்கப்பட்ட உடல் “மமி” என அழைக்கப்பட்டது இந்த மமியை பாதுகாக்கும் நோக்குடன் எழுப்பப்பட்ட கட்டிடங்களே பிரமிட்டுக்களாகும்.எகிப்தியர்களின் கலைப்படைப்பை தொடர்ந்து வந்த கிரேக்கர்கள் எகிப்த்திய சாம்பிராச்சியத்தை
மிஞ்சும் அளவிற்கு கிரேக்கக காலம் உயிர்பெற்றது இதில் “பாதினன் தேவாலயம்” மிகவும் சிறந்த எடுத்துகாட்டு அதனைத் தொடர்ந்து உரோமிய வரலாறுகிரேக்கர்களின் சமகாலமாக இருந்தாலும் கிரேக்கரை விட பலம் பொருந்திய அரசாக கானப்பட்டது  அதனால் உரோமில் இன்றும் எச்சமாக காணப்படும் கட்டிடங்களில் “கொலாசியம"  முக்கியமானது இதனைத் தொடர்ந்து பல்வேறு நாகரிகம் தோற்றம் பெற்று வீழ்ச்சியடைந்தும் இன்றைய காலத்திலும் அவற்றுக்கான எச்சங்கள் சான்று பகிர்கின்றன.


வரலாற்றுக்கு முற்ப்பட்ட கற்கால மனிதர்களால் உருவாக்கப்பட்ட படைப்புக்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் பரந்து கிடக்கின்றன அன்னிய நாடுகளில் மரபுரிமைச் சொத்துகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதும் வீரம்நிறைந்த தமிழ் தேசமான எமது மண்ணில்  பாதுகாக்கபடாமல் சிதைந்து போகும் எச்சங்கள் பற்றிய ஒரு அலசல் .எமது வரலாற்று முதுசம்கள் அழிந்து மற்றும் அழிக்கப்பட்டு வருகின்றன. நாளைய நம் தலைமுறைக்கு எமது வரலாற்று தடங்களிற்கான ஆதாரங்களைப் பேணி ஒப்படைப்பதில் நாம் எள்ளளவிலும் சிரத்தை எடுத்துச் செயற்படுவதாயில்லை. ஓவ்வெரு நாட்டின் பெருமையை உலகிற்கு எடுத்தியம்புவது அந்நாட்டு அரசாங்கம் முக்கிய பங்கை வகிக்கின்றது ஆனால்?
எமது தேசத்தில்…பல நூற்றாண்டுகளையும் கடந்து பல யுத்தங்களையும் எதிர்
கொண்டு இன்றும் யாழ்பாணத்தில் அழிந்த மற்றும் அழிந்து வரும் பல்வேறு
பொக்ஷங்கள் கானப்படுகின்றது எனினும் அவை நாளுக்கு நாள் சிதைவடைந்து
வருவதும். காதலர்களின் சின்னங்களாக அவர்களின்  பெயர்களை சுமந்தும்
காணப்படுவதும் வருத்தத்திற்கு உரியது இவற்றில் ஒரு சிலததைப் பற்றியது.


நல்லூரில் உள்ள மந்திரிமனை. இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாண
இராச்சியத்தின் தலைநகராக இருந்தாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாண நகரில்
இருந்து சுமார் இரண்டு மைல்கள் தொலைவில் உள்ள நல்லூரில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சிறிது தூரத்தில் கானப்படுகின்றது. இது ஒரு ஒல்லாந்தர் காலக்
கட்டிடமென்றே கூற முடியும். இக் கட்டிடத்தின் உள்ளே மரத்தாலான சில
தூண்கள், போதிகைகள் உட்படச் சில பகுதிகள் தற்பொழுது கானப்படுகின்றன உள்ளே பல மர வேலைப்பாடுகளுடனான தூண்களையும் காணலாம். அதுவும் சிதைவடைந்த வாறேயுள்ளது. குடியிருப்பாக மாறிஇருப்பதும் பாலடைந்த நிலையில் இருப்பதுமாக கானப்படுவது . வருத்தத்திற்குரியது.


எப்படியாயினும், யாழ்ப்பாணத்தில் அதன் காலனித்துவ காலத்துக்கு முற்பட்ட
தொடர்புகளைக் கொண்ட, எஞ்சியுள்ள மிகச் சில கட்டிடங்களில் ஒன்று
என்றவகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது .மற்றும் சங்கிலித்தோப்பு
வளைவு, இது சங்கிலியன் மந்திரிமனைக்கு எதிரே சற்றுத் தொலைவில் உள்ளது யாழ் பருத்தித்துறை வீதியில்; அமைந்துள்ள ஒரு நுளைவாயில் ஒன்று. பழைய அரண்மனையின் சிதைவு தற்பொழுது இதற்குத் தகரத்தாலான கொட்டகையொன்று அமைத்து மழை, வெயிலிலிருந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது


யழுனா ஏரி யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்த நல்லூரில் ப வடிவிலமைந்தஒரு கேணி ஆகும். இது யாழ்ப்பாணத்தைக் கடைசியாக ஆண்ட சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பு வளவில் உள்ளது .யமுனா நதியின் நீர் கலக்கப்பட்டதால் இது யமுனா ஏரி எனப்படுகிறது . புதர் மண்டிய பற்றைக் காட்டினிடையே அமைதியாய் சிதைவடைந்தவாறு  இன்றுமிருக்கிறது. யமுனா ஏரிக்குச் செல்வதற்கான பாதையை அதற்கு அண்மையில் சென்று நின்று கேட்டால் கூட தெளிவான பதில் இல்லை அப்பகுதியில் வாழ்மக்கள் கழிவுகளினை வீச சிறந்த இடமாக திகழ்கின்றது பற்ரைகளுக்கு மத்தியில் நிர்கதியான நிலையில்  உள்ளது அரசு ஏன் இதனை பொறுப்பேற்கவில்லை நாளடைவில் சிதைந்து இருக்கிடமும் தெரியாமல போய்விட்டால் தமிழர் வாழ்ந்த தடங்கள் இன்றி அழிந்துவிடும். யாழ்மக்களும் எவ்வித அக்கரையும் எடுப்பதாக தெரியவில்லை எமது சொத்துக்கள் அழிவடைகின்றன அழிக்கப்பட்டு வருகின்றன என்பதை மட்டம் மறக்காமல் கூறிக்கொள்வர் மரபுரிமைகளை பாதுகாக்கும் விடயத்தில் ஏனோ? மௌனம் காக்கின்றனர்


இவ்வாறான. சுற்றுளாதளங்களாக  இருக்கவேண்டிய இடம.; வரலாற்று புகழ்பூத்த மன்னர்கள் ஆட்சிசெய்த களம் அது. என்னும் எத்தனை தலைமுறை தான் இதனை பார்கபோகின்றனவோ! யாழ்ப்பாணத்தில் இராசதானி அமைத்து தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்று நாளைய தலைமுறைக்கு கட்புல ஆதாரமாகக் காட்டக்கூடிய சில ஆதாரங்களே இன்று நம்மிடையே எஞ்சியுள்ளது.அவையும் சிதைவடைந்து நலிவடைந்து
அழிவடையும் நிலைக்குச் செல்வதை நாமெல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம்;!


அதைவிட கலை மதிப்பீட்டில் பௌத்த கலாச்சார மரபுரிமை சம்மந்தப்பட்ட
விடையங்களே பெருமளவில் உள்ளன. சிங்கள மன்னர்கள் ஆட்சி செய்த காலப்பகுதியை விட தமிழ் மன்னர்கள் அதை விட அதிக காலம் ஆட்சி செய்திருக்கிரார்கள் என்பதற்கான தொல்பொருள் சான்றுகள் உள்ளன. அவர்களின் சிறு எச்சங்கள் கூட இன்னு வராற்று சிறப்புமிக்க இடங்களில் பெக்கிஷமாக பேணப்படுகின்றது.பராமரிப்புச் செலவுக்காக ஆண்டு தோறும் நிதியை ஓதுக்குகின்றது அரசு . ஆனால் எமது மரபுரிமை அழிந்து வருகின்றன .ஒரு தேசத்தின் சுவடுகளே நாகரிகத்தின் கலைகள் .எனவே தான் வரலாற்றுடன் தொடர்பு பட்டதாகவும் உள்ளது .கலை மனிதனின் பொது மொழி ஆகும். ஒவ்வோர் கணமும் அவை சிதைவடைந்து அழிவடைந்து கொண்டேயிருப்பது தவிர்க்க முடியாதது என்பதுமட்டும் அனைவரும் அறிந்ததே!


வீதிகளுக்கு மன்னர்களின் பெயர்களும் வீதியின் மத்தியில் சிலைகளும்
இருந்தால் போதுமா? நமது உரிமைகளுக்கு நாமே தான் பொறுப்பாளிகள்…

1 comment: